Saturday, November 5, 2011

காதல் கைகூ கவிதைகள்



உன் நினைவுகளால் உருகுமொரு மலர்
உனக்காக ஒரு மலருடன் இங்கே
உன் வரவை எதிர்நோக்கிய வண்ணம்...


என் இதயத்தை உன்னிடம் தந்து விட்டேன்
என்னுடன் பேசாது இருந்து விடாதே...
உன் மௌனம் என் உயிரற்ற உடலைக் கூட
அணுவணுவாய் அழித்துவிடும்...


இனிப்பை தேடினேன் இவ்வுலகெங்கும்
ஈற்றில் அறிந்து கொண்டேன்
அது உன் நினைவுகள் மட்டும் தான் என்று...

Friday, November 4, 2011

கவிதை கிடைத்துவிட்டது...

எமக்கொரு கவிதை கிடைத்து விட்டது...
புரிந்து கொள்ள துடிக்கின்றோம்
புரியவும் முடியவில்லை...

புரிந்தும் புரியாமலும் 
இங்கே இரு உள்ளங்கள் 
கவிதையாகிய காதலை 
புரிந்து கொள்ள காதல் வானில் பறக்கின்றன...

காதல்...


காதல் வந்தது...
கவிதை தந்தது...
கனவும் தந்தது...
காத்திருப்பும் தந்தது...- ஆனால்
கபடமற்ற என் உள்ளத்தை மட்டும்
களவாடிச் சென்றது...