வாழ்வின் வசந்த காலம்...
அது தான் மனித வாழ்வின் இலைதுளிர்காலமும் கூட ...
மீண்டுமொரு முறை வந்துவிடவேண்டும் என்வாழ்வில்
அவ் இனிய மழலை வாழ்வு....
என்றும் மலர்ந்த முகம்
உதிராத சிரிப்பு
உள்ளத்தை உருக்கும் குறும்புத்தனம்...
மீண்டுமொரு முறையேனும் வந்துவிட்டால்...
ஆஹா... அற்புதம்...
நினைத்தாலே தேனூறும் பருவமன்றோ???
செல்லக்கிளிகளாய் ஆனந்தவுலகில் பறந்திடலாம்
ஆயிரம் ஆயிரம் மழலை மொழிகளை பேசியவாறே...
சோகமே அறியாத சொர்க்க வாழ்வன்றோ அது???
ஆனந்தக்கடலில் முழ்கி ஆகாயத் தேவதைகளாய்
வாழ்ந்துவிடலாம்...
மாசற்ற மழலை வாழ்வு மீண்டுமொரு முறை வந்துவிட வேண்டும்...
உலகின் ஒளிரும் நட்சத்திரங்களாய் என்றும் வந்துவிட
மழலை வாழ்வு வேண்டும் - எனக்கு
மீண்டுமொரு முறையேனும் மழலை வாழ்வு வேண்டும்...

No comments:
Post a Comment