Sunday, October 16, 2011

மழலை...



சிகரங்கள் கூட தலை சாய்த்து விட முயல்கின்றன
உன் மழலைத்தனத்தைப் பார்த்து...
உன் மழலைச் சிரிப்பும் மழலை மொழியும் 
மலையாயிருந்த எம் துன்பத்தை
மின்னலாய் வந்து ஒரே நொடியில் அடித்துச் சென்றதே...
கருங்கற் பாறை கூட கனிந்து விடுகிறது உன் 
கனி போன்ற மழலை மொழிகளால்... 
உன் மலர்ப்பாதம் தன்மீது தவண்டதால் 
வன்பாறையும் மென்பாறையானதே... 

2 comments:

  1. ஆஹா..
    என்ன ஒரு கற்பனைக்காவியம் தீட்டி இருக்கிறீர்கள்.

    பகலவனைக் கண்ட பனித்துளி போல
    வந்த துன்பம் தெறித்தோடும் மழலை இன்பம். மானுடத்தில்
    வரம்.

    இதற்கு தொடர்புடைய என்னுடைய இடுகையை
    பாருங்கள் சகோதரி.
    http://ilavenirkaalam.blogspot.com/2011/10/blog-post_16.html

    ReplyDelete
  2. நன்றி சகோதரரே...
    மழலை இன்பம் சொர்க்க இன்பத்திலும் மென்மையானது அல்லவா???
    வர்ணிக்கமுடியாத பேரின்பம் கூட அதுவல்லவா???...

    ReplyDelete