உதிராத புன்சிரிப்புடன் இருக்கும் இவ் றோஜாக்களை
என் உயிரையே உருக்குகின்ற
உனக்காக தினந்தோறும் சேகரித்து வைக்கின்றேன்
நீயோ!!!
என் முன்னே இன்னும் வர மறுக்கின்றாய்...
உதிராத சிரிப்புடன் உனக்காக காத்திருக்கிறேன்
என்றோ ஒரு நாள் வருவாய் என்ற நம்பிக்கையில்...
ஆனால், அகத்திலோர் ஏக்கம்
இந்த றோஜாக்களை போல் விரைவில் வாடிவிடுவேனோ என்று தான்...
ஓடோடி வருவாயா
உன் நினைவுகளால் உருகிக்கொண்டிருக்கும்
உன் உயிர் தேவதையிடம்
உதிராத இவ் றோஜாக்களை பெறுவதற்காய்...

No comments:
Post a Comment