Monday, October 3, 2011

ஐ ஆம் சொறி



மனமே!!! 
மன்னித்து விடுவாயா
என்னை மன்னித்து விடுவாயா???
நான் எண்ணும் தவறான எண்ணங்களை 
மன்னித்து விடுவாயா???

உலகப்பற்றும் உயிர் மீது கொண்ட பேராசையும்
என் மனதை அலைபாயச் செய்கிறது தான்
யான் ஞானியுமல்ல துறவியுமல்லவே...
எனினும் என் மனம் அதை ஏற்க மறுக்கிறதே!
ஏதோ தவறிழைத்து விட்டதாய்
ஏதேதோ பயமுறுத்தல்கள்...

உன் உபதேசத்தில் மூழ்கிப் போன எனக்கு 
நீயோ புகட்டியது 
நல்லதை செய்,எண்ணு என்று தான்...
இதை உயிர் பிரியும் நேரத்தில் கூட 
கடைப்பிடிக்கச் சொல்லி மீண்டும் ஒரு வற்புறுத்தல்
நானும் உன் வழிநடத்தலிலே...
ஆனால், சில சமயங்களில் 
அயலவர்களின் நடத்தையைப் பார்த்து 
அவ்வாறே நடக்கலாமா என்ற எண்ணம்
நீயோ அந்த நேரத்திலும் 
"உன் இயல்பை விட்டுவிடாதே " என்கிறாய்
நானும் உடனே உன்னிடம் மன்னிப்பும் கோருகின்றேன்...

உயிர் துறந்தும் உயிர் வாழும் உத்தமர்களின் கருத்துக்களையும்
அறக் கருத்துக்களையும் ஊன்றி ஆராய்ந்தறிந்து 
வலுப்பட்ட நீ 
பூவுலக வாழ்வில் அகப்பட்டு நேரிய வழி தேடும் எனக்கு 
நல்வழி காட்டுவாயா மனமே...

No comments:

Post a Comment