Thursday, October 20, 2011

உழவர் வாழ்வு உயர்வுற வேண்டும் ...



உதிரத்தையே உரமாக்கி, வியர்வையை நீராக்கி
ஆதவனின் உதவிக்கரத்தை உயிராகக் கொண்டு 
அயராத உழைப்பால் உலகையே
அரவணைக்கும் உழவர் வாழ்வு
என்றும் உயர்வுற வேண்டும்....
ஆழ்மனதில் பதிந்துவிட்ட அவர்களின் ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புக்கள்
அனைத்துமே நிறைவேற வேண்டும்...

விஞ்ஞானவுலகினிலே பற்பல தொழில்கள் - எனினும்
உலகமே வியந்து போற்றும் தொழில் இதுவன்றோ???
இது தொழிலா???
இல்லவே இல்லை 
இதுதான் மனித குலத்தின் உயிர்நாடி...

உலகின் பசித்துன்பம் தீர்த்து உலகை காக்கும்
உத்தமராம் இவர்தம் வாழ்வு மட்டும் 
இங்கே வறுமையில் தவிப்பது எதற்காக???
அரசின் கொள்கைகளா அன்றேல் இடைத்தரகர்களின் செயலா
இவர்தம் வாழ்வை உருக்குலையச் செய்கின்றன???  

உறுதியான வாழ்வு கட்டியெழுப்பப்பட வேண்டும் 
இவர்தம் வாழ்வினிலே...
அதுவே மனிதகுலத்தின் செழுமைக்கும் அடித்தளமாம்...

Wednesday, October 19, 2011

முழுமதியே!!!



கருணை நாயகமாய்
பட்சிகளுக்கு விடுதலையளிக்கும் முழுமதியே!!!
இங்கு என் இதயம் கட்டுப்பாட்டை இழந்து பறந்துவிட்டது
உன்னைக் கண்டவுடனேயே...

என் இதயத்தை உன் இதயத்தில் வைத்துவிடு
இன்றேல் பறந்துவிட்ட என் இதயம் ஆதரவின்றி துடித்துவிடும்...
ஆரவாரிக்கும் உயிரணுக்கள் கூட சிதைந்துவிடும்...
நிலையற்ற மனித வாழ்வில் 
என் இதயத்தை மட்டும் உன்னிடத்தே நிலைபெற செய்வாயா???


பட்சிகளைப் போல நானும் உனை விட்டுச் செல்ல முடியால்
உன்னையே சுற்றிவருகிறேன் - ஆனால்
நீயோ உன் கருணையுள்ளத்தால் எனக்கும் விடுதலை தருவதற்கு முயல்கிறாய்...
நானோ என்னுயிரை விட்டு செல்ல முடியாமல் தவிப்பது 
புரிகின்றதா அன்றேல் புரியவில்லையா???
முழுமதியே உன் செவ்விதழ்களை அசைத்து பதில் கூறமாட்டாயா???

மீண்டுமொரு மழலை வாழ்வு



வாழ்வின் வசந்த காலம்...
அது தான் மனித வாழ்வின் இலைதுளிர்காலமும் கூட ...
மீண்டுமொரு முறை வந்துவிடவேண்டும் என்வாழ்வில்
அவ் இனிய மழலை வாழ்வு....
என்றும் மலர்ந்த முகம்
உதிராத சிரிப்பு
உள்ளத்தை உருக்கும் குறும்புத்தனம்...
மீண்டுமொரு முறையேனும் வந்துவிட்டால்...

ஆஹா... அற்புதம்...
நினைத்தாலே தேனூறும் பருவமன்றோ???
செல்லக்கிளிகளாய் ஆனந்தவுலகில் பறந்திடலாம்
ஆயிரம் ஆயிரம் மழலை மொழிகளை பேசியவாறே...

சோகமே அறியாத சொர்க்க வாழ்வன்றோ அது???
ஆனந்தக்கடலில் முழ்கி ஆகாயத் தேவதைகளாய்
வாழ்ந்துவிடலாம்...
மாசற்ற மழலை வாழ்வு மீண்டுமொரு முறை வந்துவிட வேண்டும்...

உலகின் ஒளிரும் நட்சத்திரங்களாய் என்றும் வந்துவிட
மழலை வாழ்வு வேண்டும் - எனக்கு
மீண்டுமொரு முறையேனும் மழலை வாழ்வு வேண்டும்...

Sunday, October 16, 2011

இரு இதயங்கள் பரிமாறப்படுகின்றன...

இதமான தென்றல் காற்றில்
இங்கே இரு இதயங்கள் பரிமாறப்படுகின்றன
இனி புயல்களும் எழலாம்...
அடித்துச் செல்லும் புயலில்
இதயங்களும் நொருங்கிவிடும்
ஆகவே உயிரான அன்பால் காத்துக்கொள்ளுங்கள்
பரிமாறப்பட்ட உங்கள் இதயங்களை...

மழலை...



சிகரங்கள் கூட தலை சாய்த்து விட முயல்கின்றன
உன் மழலைத்தனத்தைப் பார்த்து...
உன் மழலைச் சிரிப்பும் மழலை மொழியும் 
மலையாயிருந்த எம் துன்பத்தை
மின்னலாய் வந்து ஒரே நொடியில் அடித்துச் சென்றதே...
கருங்கற் பாறை கூட கனிந்து விடுகிறது உன் 
கனி போன்ற மழலை மொழிகளால்... 
உன் மலர்ப்பாதம் தன்மீது தவண்டதால் 
வன்பாறையும் மென்பாறையானதே... 

Friday, October 7, 2011

உன் கண்கள் செய்யும் வித்தைகளால்...



உனக்கு தெரியுமா
உன் கண்கள் செய்யும் வித்தைகளால்
என் உயிரணுக்கள் கொந்தளிப்பதையும்
என்னுள்ளம் வெந்து தனலாகிப் போவதையும்...

என்னவளே உன் கண்களையும் சற்று மறைத்துவிடு
இன்னும் சில காலம்
இதுவரை நீ செய்த வித்தைகளின் நினைவுகளுடன் 
வாழ்ந்துவிடுகிறேன்... 

மங்கையே!!!



மலர்களுடன் போட்டியிட எண்ணாதே
உன்னைக் கண்ட கலக்கத்தில்
படை வலிமையற்ற பூவுலக புன்னகை மன்னர்கள்
தன்மானம் அழிய முன் 
தம்முயிரை மாய்த்துவிடப்போகின்றார்கள்...

அவர்களின் மென்மையை வென்றுவிட்ட நீ
அவர்களைக் கொன்று கல்நெஞ்சாள்  ஆகிவிடாதே...
உன்னிடம் வெல்ல பூவுலகும் 
தயங்கியே நிற்கின்றது...

மௌனத்தால் கொல்லாதே...



மதியே! ஒரு வார்த்தையேனும் பேசிவிடு
உன் மௌனம் மரணத்திற்கான வழியன்றோ???
சிந்தித்துப் பாரேன் ஒரு கணம்
என்னுயிரின் நிலையாமையை...
அழித்துவிடு மதியே... அழித்துவிடு...
உன் மௌனம் காக்கும் உள்ளத்தை 
ஓரிரு கணத்தில் அழித்துவிடு...

மலர்களே!!!



பூந்தோட்டத்தில் புதிய மலரொன்று 
மலர்ந்துவிட்டது


மலர்களே உங்களை இனி தேனிக்கள் நாடாது
இப்புதிய மலர் ஒன்றே போதும் 
அவற்றின் வாழ்விற்கு...

Wednesday, October 5, 2011

மனித குலமே வாரீரோ!!!



உம்மிடம் என்ன தான் கேட்டேன்
எதற்காக இந்த புன்முறுவல்???
ஓ!!! மனித வாழ்வைப் பார்த்தா
அன்றேல் நல்வாழ்விற்கான வழிப்படுத்தலா???

தினம் தினம் இவ்வுலகில் நடந்தேறும் செயல்களால்
மனித மனம் அடிக்கடி துன்பக்கடலில் மூழ்கிவிடுகிறது தான்...
அதற்காகவா முறுவலிக்கின்றீர்கள்???
ஓ! தன்னம்பிக்கையற்ற மனித வாழ்வைப் பார்த்தா???

ஆமா... ஓரிரு நாட்களிலே முடியும் வாழ்க்கையாயினும் 
எவ்வளவு பூரிப்பு எம் முகத்தில்...
நீங்களோ துன்பத்தில் மூழ்கி 
அத்துன்பக் கடலலையால் உற்றாரையும் அடித்து செல்வீர்களே!
மனித வாழ்வில் கற்றுக்கொண்டது இதுதானா???
இதை விடுத்து உள்ளங்களை உவகை ஊட்டி 
கொள்ளையிடுவதற்காய் 
வாரீரோ மனித குலமே வாரீரோ!!!

காதல்



உணர்வுகளை ஸ்பரித்த நீ
என் உள்ளம் படும் அவஸ்தையை அறியாது
உடலை உருக்கி உயிரை எடுத்துவிட்டாய்...
இதனால் தான் என் உதிரமும் உறைந்துவிட்டது
உன் இனிமையான நினைவுகளில்...

உன் உயிர் தேவதையிடம்...



உதிராத புன்சிரிப்புடன் இருக்கும் இவ் றோஜாக்களை 
என் உயிரையே உருக்குகின்ற 
உனக்காக தினந்தோறும் சேகரித்து வைக்கின்றேன் 
நீயோ!!!
என் முன்னே இன்னும் வர மறுக்கின்றாய்...

உதிராத சிரிப்புடன் உனக்காக காத்திருக்கிறேன் 
என்றோ ஒரு நாள் வருவாய் என்ற நம்பிக்கையில்...
ஆனால், அகத்திலோர் ஏக்கம் 
இந்த றோஜாக்களை போல் விரைவில் வாடிவிடுவேனோ என்று தான்...

ஓடோடி வருவாயா
உன் நினைவுகளால் உருகிக்கொண்டிருக்கும்
உன் உயிர் தேவதையிடம்
உதிராத இவ் றோஜாக்களை பெறுவதற்காய்...

Monday, October 3, 2011

ஐ ஆம் சொறி



மனமே!!! 
மன்னித்து விடுவாயா
என்னை மன்னித்து விடுவாயா???
நான் எண்ணும் தவறான எண்ணங்களை 
மன்னித்து விடுவாயா???

உலகப்பற்றும் உயிர் மீது கொண்ட பேராசையும்
என் மனதை அலைபாயச் செய்கிறது தான்
யான் ஞானியுமல்ல துறவியுமல்லவே...
எனினும் என் மனம் அதை ஏற்க மறுக்கிறதே!
ஏதோ தவறிழைத்து விட்டதாய்
ஏதேதோ பயமுறுத்தல்கள்...

உன் உபதேசத்தில் மூழ்கிப் போன எனக்கு 
நீயோ புகட்டியது 
நல்லதை செய்,எண்ணு என்று தான்...
இதை உயிர் பிரியும் நேரத்தில் கூட 
கடைப்பிடிக்கச் சொல்லி மீண்டும் ஒரு வற்புறுத்தல்
நானும் உன் வழிநடத்தலிலே...
ஆனால், சில சமயங்களில் 
அயலவர்களின் நடத்தையைப் பார்த்து 
அவ்வாறே நடக்கலாமா என்ற எண்ணம்
நீயோ அந்த நேரத்திலும் 
"உன் இயல்பை விட்டுவிடாதே " என்கிறாய்
நானும் உடனே உன்னிடம் மன்னிப்பும் கோருகின்றேன்...

உயிர் துறந்தும் உயிர் வாழும் உத்தமர்களின் கருத்துக்களையும்
அறக் கருத்துக்களையும் ஊன்றி ஆராய்ந்தறிந்து 
வலுப்பட்ட நீ 
பூவுலக வாழ்வில் அகப்பட்டு நேரிய வழி தேடும் எனக்கு 
நல்வழி காட்டுவாயா மனமே...