Tuesday, August 16, 2011

ஏதேதோ உணர்வலைகளை...



பூங்கையிலொரு பூக்கூடை கொடுத்து
உன்னை தொலைதூர நோக்குடன்
படைத்துவிட்டான் பிரம்மன்
நீயோ உன் விழியம்புகளால் யாரைத் தான்
சாய்த்துவிட முயல்கின்றாயோ???



உன் புன்னகை சிந்திய முகத்தில்
ஏதேதோ உணர்வுகளின் வெளிப்பாடு...
உன் மௌனம் காக்கும் உள்ளம்
நெளிந்து வளைந்த முடிகளுள்
சிக்குண்ட உன் தாமரை முகத்தில்
பிரதிவிம்பமாகின்றதே!!!
இவை என் மனதை
துண்டு துண்டாகக் கிழித்து
ஏதேதோ உணர்வலைகளை...
தோற்றுவிட்டேன் உன்னிடத்தே நான்...

Sunday, August 14, 2011

கண்சிமிட்டும் நட்சத்திரங்களே!!!



உங்கள் புன்சிரிப்பிற்கு காரணம் தான் எதுவோ???
உலகின் உச்சியிலே இருப்பதனாலா அன்றேல்
உங்கள் எதிரி நிலாவை மென்று ஒளியைப் பெற்றுவிட்டதனாலா???


உங்கள் புன்சிரிப்பால் பூவுலக உள்ளங்கள்
கொள்ளையிடப்பட்டு விட்டன என்ற
புகார் உண்மை தானோ???
ஓ... நீ என்னையும் கொள்ளையிட
ஆயத்தமாகி விட்டாய் போல...


உன்னை உற்றுநோக்கிய என் விழிகள்
ஓரிரு கணப் பொழுதிலேயே
உன்னால் சிறை வைக்கப்பட்டு விட்டன தான்
பிணையில் விடக் கூட மறுக்கின்றாயே...
நான்... நான்... நான்...
மீட்கமுடியாதா என்னை???
ஆ... என்னை மீட்க பூரணநிலாவாக அவதாரம் எடுக்க
துணிந்து விட்டால் என் தேவதை...

Monday, August 8, 2011

நட்பென்ற வலையில் சிக்குண்ட எமக்கு...



சிந்தனைகளும் ஒன்றானது
செயல்களும் ஒன்றானது
நட்பென்ற வலையில் சிக்குண்ட எமக்கு...


அன்பால் உருகிய எம் உள்ளங்கள்
குதூகலமாய் பறக்கவே செய்தன
எல்லைகளற்ற உலகை நோக்கி...
விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும்
எம்மை துரத்தித் துரத்தி ஆட்கொண்டு விட்டன...


உன்னைக் கண்டு ஓரிரு நாட்கள் தான்
ஆகின்றன-என் வாழ்நாளில்
நீயே என் உள்ளத்தை
கொள்ளை கொண்டுவிட்டாய்
உன் குறும்புகளாலும் என் மேல் நீ
கொண்ட உரிமைகளாலும்...


இன்றும் என் மனதில் ஓரிரு சந்தேகங்கள்
என் மனதைக் கண்ணாடி போன்று
உன்னிடம் காட்டிக் கொடுப்பது யாரோ என்பதுதான்
அது, அது... இறைவனா???


இல்லை...இல்லை...இல்லவேயில்லை...
தெளிந்துகொண்டேன்
இது தான் எம் நட்பின் வலிமை என்று.