காற்றோடு கலந்தன-என்
உதிரத்தால் கலந்த உறவுகளின் வாழ்க்கை.
பயணிக்கின்றது, பயணிக்கின்றது-அது
A9 வழியே பயணிக்கின்றது.
பரந்தன்,கிளிநொச்சி,கொக்காவில்,
மாங்குளம் கடந்தும் பயணிக்கின்றது...
ஆனால், என் மனமோ பிறேக்டவுண் ஆகிவிட்டது.
முயற்சித்துப் பார்த்தேன் மறுத்தது
அது தன் பயணத்தை...
சிறிது நிமிடம் கண்களை மூடினேன்
எம் உறவுகள் புன்னகையுடன்...
மீண்டுமொரு விருந்திற்கு வருமாறு அழைத்தவாறே...
என் மனமோ மகிழ்ச்சியால் பூரித்தது... குளிர்ந்தது...
என் உள்ளத் தொலைக்காட்சியை நிறுத்தினார்
அருகிலிருந்த பயணி ஓமந்தை சோதனைச் சாவடி வந்துவிட்டதைக் கூறிக் கொண்டே...
அந்த நிமிடம் என் மனமோ ஏங்கியது
அந்த உறவுகளையும் அவர்தம் வாழ்வியலையும் எண்ணி
அவற்றைக் கூற என் மனம் துடித்தது-ஆனால்
கேட்பதற்கோ இருந்தது காற்றொன்றே...
எனினும் கூறினேன் என் உறவுகளின் உணர்வுகளை.
அக்காற்று சென்றதோ எவ்விடம் தெரியவில்லை...
எவ்வாறாயினும் அக்காற்று அவர்தம் வாழ்வில்
ஒளியேற்ற மீண்டும் தென்றலாய் வரும் என்ற
நம்பிக்கையில் பயணத்தைத் தொடர்ந்தேன்...



