உதிரத்தையே உரமாக்கி, வியர்வையை நீராக்கி
ஆதவனின் உதவிக்கரத்தை உயிராகக் கொண்டு
அயராத உழைப்பால் உலகையே
அரவணைக்கும் உழவர் வாழ்வு
என்றும் உயர்வுற வேண்டும்....
ஆழ்மனதில் பதிந்துவிட்ட அவர்களின் ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புக்கள்
அனைத்துமே நிறைவேற வேண்டும்...
விஞ்ஞானவுலகினிலே பற்பல தொழில்கள் - எனினும்
உலகமே வியந்து போற்றும் தொழில் இதுவன்றோ???
இது தொழிலா???
இல்லவே இல்லை
இதுதான் மனித குலத்தின் உயிர்நாடி...
உலகின் பசித்துன்பம் தீர்த்து உலகை காக்கும்
உத்தமராம் இவர்தம் வாழ்வு மட்டும்
இங்கே வறுமையில் தவிப்பது எதற்காக???
அரசின் கொள்கைகளா அன்றேல் இடைத்தரகர்களின் செயலா
இவர்தம் வாழ்வை உருக்குலையச் செய்கின்றன???
உறுதியான வாழ்வு கட்டியெழுப்பப்பட வேண்டும்
இவர்தம் வாழ்வினிலே...
அதுவே மனிதகுலத்தின் செழுமைக்கும் அடித்தளமாம்...