Thursday, June 14, 2012

தனிமை


அன்னையை பிரிவதால் வரும் தனிமையும்
உடன்பிறப்புக்கள் விலகிச் செல்வதால் வரும் தனிமையும்
உலகமாய் எம்மை சுற்றும் நட்புக்கள் பிரிவதால் வரும் தனிமையும்
காதல் கொண்ட இதயத்தின் மௌனத்தால் வரும் தனிமையும்
துன்பத்தின் போது கடவுள் தன் குழந்தையை
கருணையிலிருந்து தனிமைப்படுத்துகிறாரா 
என எண்ணுகையில் வரும் தனிமையும்
கொடியது சாவிலும்...
உயிரை வலிந்து கொல்லும் இத்தனிமையிலும்
உயிரான அன்புடைய இதயங்களை நினைக்கையில் 
தனிமை கூட சுகமே...

Saturday, May 5, 2012

அன்பு கொண்ட இதயங்கள் விலகிச் செல்கின்றன

அன்பு கொண்ட இதயங்கள் விலகிச் செல்கின்றன
இங்கோர் இதயம் இருப்பதை மறந்து...
இல்லை... இல்லை...
மரணத்திலும் மறவாத அவ்விதயங்கள்
கால தூதுவனின் நகர்த்தலால் நகர்கின்றன...
விலகிச்சென்று அன்பை பன்மடங்காக்க...

செவ்வழகின் தேவதை என்று முழங்கு...

மாலை கதிரவன் உன்மேல் முத்தமிட்டு சென்றானா- அன்றேல்
செவ்வானத்தையே ஆடையாய் பரிசளித்துவிட்டானா???
உன் செவ்வழகை கண்டு
ஆகாயம் தன் அழகு கெட்டுவிட்டதாய் கோபம் கொண்டு
மின்னலாய் உன்மேல் பாய
நீயோ அவ் ஒளிக்கீற்றுகளையும்
கள்ளமாய் திருடிக்கொண்டாய் போலும்...
அதனாலும் கோபம் கொண்ட வானம் மழையை பொலிந்து
உன் செவ்வழகை கரைத்துவிட தயாராகின்றது...
உன் செவ்வழகு கரைவதற்கல்ல...
கவர்வதற்கே...கவர்வதற்கே...
இயற்கையின் வரம் பெற்றேனே
செவ்வழகின் தேவதை என்று முழங்கு...

உள்ளம் பட்டாம் பூச்சியாய் மாறிவிட...

பூக்கள் கூட உன் போல் மலர்ந்ததில்லை...
வானத்து நட்சத்திரங்கள் கூட உன் போல் கண்சிமிட்டியதில்லை...
தேவதைகள் கூட உன் போல் புன்னகைத்ததில்லை...
உன்னை பார்த்த நிமிடம் முதல்
என் துன்பம் பறந்ததேனோ???
ஆயிரம் ஆயிரம் மொழிகள் இருந்தும்
நீ பேசும் செல்ல மழலை மொழிகளை மட்டும்
புரிந்துகொள்ள முடியவில்லை...
புரியவும் முயற்சிக்கவில்லை...
உன் குறும்பான மழலை மொழி போதும்
உள்ளம் பட்டாம் பூச்சியாய் மாறிவிட...

பூலோக(பூக்களின் உலக) பேரழகி நீ மட்டுமே...

என்னை பார்த்து தலை சாய்ந்தன
என் தோட்டத்து பூக்கள்...
இன்றோ உன் கைகள் என்னை வருடிய போது
உணர்ந்தேன் என்நிலையை...
உன் மென்மையான பேரழகின் முன் என்நிலையை...
தன்மானம் இன்றி வாழ முடியாது...
என் மலர்மேனி உதிரட்டும்...
பூலோக(பூக்களின் உலக) பேரழகி நீ மட்டுமே... 

Saturday, November 5, 2011

காதல் கைகூ கவிதைகள்



உன் நினைவுகளால் உருகுமொரு மலர்
உனக்காக ஒரு மலருடன் இங்கே
உன் வரவை எதிர்நோக்கிய வண்ணம்...


என் இதயத்தை உன்னிடம் தந்து விட்டேன்
என்னுடன் பேசாது இருந்து விடாதே...
உன் மௌனம் என் உயிரற்ற உடலைக் கூட
அணுவணுவாய் அழித்துவிடும்...


இனிப்பை தேடினேன் இவ்வுலகெங்கும்
ஈற்றில் அறிந்து கொண்டேன்
அது உன் நினைவுகள் மட்டும் தான் என்று...

Friday, November 4, 2011

கவிதை கிடைத்துவிட்டது...

எமக்கொரு கவிதை கிடைத்து விட்டது...
புரிந்து கொள்ள துடிக்கின்றோம்
புரியவும் முடியவில்லை...

புரிந்தும் புரியாமலும் 
இங்கே இரு உள்ளங்கள் 
கவிதையாகிய காதலை 
புரிந்து கொள்ள காதல் வானில் பறக்கின்றன...